மரங்களில் சரசரவென ஏறும் கேரள சதுப்பு நிலங்களில் வலம் வரும் புதிய நண்டு

திருவனந்தபுரம்: கேரள சதுப்புநில காடுகளில் இதுவரை கண்டறியாத ஒரு புதிய வகையான நண்டுகள் வாழ்வது தெரிய வந்துள்ளது. இதற்கு, ‘லெப்டார்ம பிஜூ’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் லெப்டார்ம் எனும் பேரினம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை. கேரள பல்கலைக்கழக நீர்வாழ் உயிரியல் மற்றும் மீன்வளத்துறை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் போன்றவை இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இந்த புதிய பேரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னால் நீண்ட கால்கள், கால்களின் நுனியின் வளைந்த பகுதி போன்றவை சதுப்புநில மரங்களில் வேகமாக ஏற இந்த நண்டுகளுக்கு உதவுகின்றன. மேலும், செவ்வக வடிவிலான வெளிறிய இளம் மஞ்சள் மேலோட்டில் அடர் சிவப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளிகள், அதிகம் நீண்டிருக்கும் கண்கள் ேபான்றவை இவற்றின் பிற அம்சங்களாக உள்ளன. இவ்வகை  நண்டுகளில் புறந்தோட்டின் அதிகபட்ச நீளம் 14.20, அகலம் 13.90 மி.மீட்டராகவும் உள்ளன.

Related Stories: