உலகளவில் கொரோனா பாதிப்பு: மூன்று கோடி: 9.52 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மூன்று கோடியை தாண்டியது. இதுவரை உலகளவில் 9.52 லட்சம் பேர் இறந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் 9 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் முடியவில்லை. உலகின் அடர்ந்த பனிப் பிரதேசங்களான அண்டார்டிகா, ஆர்டிக்கை தவிர, மற்ற நாடுகள் அனைத்திலும் அது பரவியுள்ளது. இந்த வைரசால் உலகளவில் நேற்று வரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 31 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரையில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 404 பேரை பலி வாங்கியுள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா, இந்த வைரசிடம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. பாதிப்பிலும், பலியிலும் உலகளவில் இதுவே முதலிடம் வகிக்கிறது. இந்நாட்டில் இதுவரையில் 67 லட்சத்து 25 ஆயிரத்து 44 பேர் பாதித்துள்ளனர். ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 597 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 பேர் பாதித்துள்ளனர். 85 ஆயிரத்து 619 பேர் பலியாகி உள்ளனர். 3வது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 44 லட்சத்து 95 ஆயிரத்து 183 பேர் பாதித்துள்ளனர். 1 லட்சத்து 35 ஆயிரத்து 793 பேர் இறந்துள்ளனர். 

Related Stories: