பயனாளர் கட்டணம் என்ற பெயரில் ரயில் கட்டணத்தை உயர்த்துவதா?... மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டிலுள்ள முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், அதற்காக பயணிகளிடம் கூடுதலாக பயனாளர் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் வி.கே.யாதவ் கூறியிருக்கிறார். பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், அதன்மூலம் ரயில் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்படுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த மறைமுகக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால், ரயில் சேவை என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும். எனவே, மாற்று வழிகளை ஆராய வேண்டும். பயனாளர் கட்டண முறையை கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: