ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து 10 நிமிடம் விளக்கை அணைத்து போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: ரயில்வே தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், அதை முறியடிக்க பயணிகள், பொதுமக்கள் வீடுகளில் நேற்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை 10 நிமிடம் விளக்கை அணைத்து போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடந்து வருகிறது. போராட்டத்தின் கடைசி நாளான நேற்று நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் மின்விளக்குகளை அணைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதைப்போன்று தமிழகத்தில் சென்னை ரயில்வே காலணி, கோவை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள், பயணிகள் என அனைவரும் தங்களுடைய வீடுகளில் ரயில்வேயை தனியார் மயமாக்குவதை எதிர்ப்பு தெரிவித்து இரவு 8 முதல் 8.10 மணி வரை 10 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது செல்போனில் டார்ச் அடித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Related Stories: