×

மார்த்தாண்டம் மார்க்கெட்டில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்; கமிஷனர் எச்சரிக்கை

மார்த்தாண்டம்: கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் நிலுவையில் இருந்த ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பொதுமக்கள் சர்வ சாதாரணமாக வெளியே நடமாட ஆரம்பித்துள்ளனர். வைரஸ் நோயின் கடுமையான பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் நோய் தாக்கம் குறித்து எந்தவித அச்ச உணர்வுமின்றி பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.  மேலும்  மார்க்கெட் வியாபாரிகள் பஸ் நிலைய வியாபாரிகள் பொருட்கள் வாங்க வருபவர்கள் என பலர் முககவசம் அணியாமல் இருந்து வருகின்றனர்.

குழித்துறை நகராட்சியை பொறுத்தவரை மார்த்தாண்டம் மார்க்கெட் அதிக மக்கள் கூடும் பகுதியாக உள்ளது. ஆனால் இங்கு காய்கறி சந்தை, மீன் மார்க்கெட் ஏலச்சந்தை வாழைத்தார் சந்தை வியாபாரிகள் பலர் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மார்க்கெட் வியாபாரிகள் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளானது சோதனையில் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனால் சுய ஒழுக்கம், கை கழுவுதல், முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி தற்போது மார்க்கெட், பஸ்ஸ்டாண்ட் பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபோன்று வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரவர்த்தக சங்க துணைச்செயலாளர் செல்வராஜ்  நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நகாட்சி கமிஷனர் மூர்த்தி கூறுகையில்: நகராட்சிக்குட்பட்ட அதிக மக்கள் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பகுகளில் வெளியில் முககவசம் அணியாமல் நடமாடும் பொதுமக்கள், வியாபாரிகள் என விதிமுறை மீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து சுகாதார பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களிடம் ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் அபராதம்| விதிக்கப்பட்டுள்ளது. முககவசம், சமூக இடைவெளி பின்பற்றாத வியாபாரிகள் மீது அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறினார்.

Tags : Marthandam Market , Penalty for not wearing a mask at Marthandam Market; Commissioner warning
× RELATED வராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்