×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முழு நம்பிக்கை போதும்.. மதத்தை உறுதிப்படுத்த தேவையில்லை : திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்திப் போடாமல் ஏழுமலையானை தரிசிக்க வழிவகைச் செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து மதம் அல்லாத தன்னுடைய மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் விவரங்களை பதிவு செய்த பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்து மதத்தின் மீது கவுரமும் உள்ளதாக கையெழுத்துப் போட்ட பின்னரே சாமி தரிசனம் செய்ய முடியும் என்ற விதியும் உள்ளது.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால் முக்கிய தலைவர்கள் சிலர் தரிசனம் செய்து சென்ற போது சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் முழு நம்பிக்கையுடன் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களின் மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்திட தேவையில்லை என்ற சூழல் கொண்டு வரப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், இம்மாதம் 23ம் தேதி திருமலைக்கு வர இருப்பதாகவும் அதற்குள் மதம் தொடர்பான உறுதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.Tags : Tirupati Ezhumalayana ,announcement ,Thirumalai Devasthanam , Tirupati, Yelumalai, Religion, Thirumalai Devasthanam, Announcement
× RELATED நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற...