×

புதிய சரக்கு, பார்சல் போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் 'ஃபிரைட் சேவா'எனும் புதிய செயலி அறிமுகம்

சென்னை : சென்னை ரயில்வே கோட்டம் தனது வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்தவும், புதிய சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதியவகை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள சரக்கு  போக்குவரத்து  மேம்பாட்டு குழு இந்த புதிய முயற்சிகளுக்கான ஒரு சான்றாகும். இந்த புதிய சரக்கு போக்குவரத்து மேம்பாட்டு குழு மூலமாக பல புதிய வாடிக்கையாளர்களை சென்னை ரயில்வே கோட்டம் ஈர்த்துள்ளது. தனது  வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதமாக ஃபிரைட் சேவா (சரக்கு போக்குவரத்து சேவை) எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்து குறித்த அத்தனை தகவல்களையும்  வாடிக்கையாளர்கள் எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது

இந்த புதிய செல்ஃபோன் செயலியின் சிறப்பு அம்சங்கள்:
* சரக்கு போக்குவரத்து சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரயில்வே அளிக்கும் பல்வேறு சலுகை/ ஊக்கத்  திட்டங்கள்
* சென்னை கோட்டத்தின்கீழ்  இயங்கும் சரக்கு கொட்டகைகள்.
* சரக்கு ரயில் பெட்டிகளின் வகைகள் மற்றும் அவற்றில் கையாளப்படும்  பொருட்கள் குறித்த விவரங்கள்
* பார்சல் சரக்கு ரயில்களின் கால அட்டவணை, சரக்கு மற்றும் பார்சல் கட்டண விவரங்கள் போன்ற தகவல்களை இந்த செயலிமூலம் பெறமுடியும்.

சரக்கு மற்றும் பார்சல் சேவைகள் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் அறிய ஒரு வினவல் தொகுதி இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில்கள் மூலம் ஏற்றி செல்வதற்கான தோராய கட்டணத்தொகையை கேட்டறியலாம். மேலும் சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளரின் நலனுக்காக, ரயில்வே அமைச்சகம் அறிவிக்கும் புதிய கொள்கை திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் இந்த செயலியில்  பதிவேற்றப்படும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள், மற்றும் பிற சரக்கு/பார்சல் போக்குவரத்து வாடிக்கையாளர்கள் இந்த புதிய  ஃபிரைட் சேவா செயலியை பதிவிறக்கி பயன்பெறுமாறு  கேட்டுக் கொள்ளப்பபட்டுள்ளனர்.



Tags : New Freight, Parcel, Transport, Freight Service, Processor, Introduction
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...