×

மேலப்பாளையம் சந்தையில் குவிந்து கிடக்கும் பழைய குப்பைத்தொட்டிகள்

நெல்லை : மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இடநெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பழைய குப்பைத்தொட்டிகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய கால்நடை சந்தைகளுள் ஒன்று மேலப்பாளையம் வாரச்சந்தை ஆகும். இங்கு திங்கட்கிழமை மாட்டுச்சந்தையும், செவ்வாய் கிழமை ஆடு, கருவாடு, கோழி உள்ளிட்ட சந்தைகளும் கூடுகின்றன. நெல்லை மாநகராட்சியின் முக்கிய வருமானம் ஆட்டுச்சந்தையாகும்.  கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தையை நம்பியுள்ள ஆடு, மாடுகள், கோழிகள் வளர்க்கும் விவசாயிகள், இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 தற்போது சந்தை திறக்கப்படாத நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் 55 வார்டுகளிலும் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து உள்ளதால் அவைகளை சந்தைப்பகுதியில் கொண்டு வைக்கும் இடமாக மாறிவிட்டன. தற்போது சந்தை முழுமையாக இயங்காத நிலை உள்ளது. சந்தை முழுமையாக இயங்கும் நேரத்தில் சந்தைக்குள் வாகனங்களும் அதிகரித்து காணப்படும். இதனால் சந்தை உள்பகுதியில் இடப்பற்றாக்குறை ஏற்படும். எனவே தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள ஓட்டை உடைசல் குப்பைத்தொட்டிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Old trash, melapalaiyam market, tirunelveli
× RELATED மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய...