கொரோனா வைரசின் 2-ம் அலை தவிர்க்க முடியாதது: புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலினை...இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்.!!!

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம்  வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் 3,06,91,232 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 74,01,032 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 2,23,33,804 பேர் குணமடைந்துள்ளனர்.  ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 56 ஆயிரத்து 396 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் உலகளவில் 14-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85  ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41,732 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக  உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகல் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய மூன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். ஏற்கனவே, இங்கிலாந்தில் பொதுவெளியில் ஆறு  பேருக்கு மேல் இருக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: