×

ஒரே நாளில் 95,880 பேர் குணம்: இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,08,431 ஆக உயர்வு: இதுவரை 53.08 லட்சம் பேர் பாதிப்பு.!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53.08 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 85 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 93,337 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,08,014 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,247 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 85,619  ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 95,880 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 42,08,431 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,13,964 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.61% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.10% ஆக குறைந்துள்ளது.


மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
    
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 301273; குணமடைந்தோர் : 834432; இறப்பு :  31791

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46506; குணமடைந்தோர் :  475717 ; இறப்பு :8685
    
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 32250 ; குணமடைந்தோர் :      201671 ; இறப்பு :  4907

கேரளா : சிகிச்சை பெறுவோர் :35795 ; குணமடைந்தோர் :90085 ; இறப்பு :  501

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :101148 ; குணமடைந்தோர் : 394026 ; இறப்பு :  7808
    
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :84423 ; குணமடைந்தோர் : 519891 ; இறப்பு :  5244



Tags : India , 95,880 people healed in one day: The number of people recovering from corona in India has risen to 42,08,431: 53.08 lakh people have been affected so far.
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...