×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு குறைகிறது நீர்வரத்து

கூடலூர் :  பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1,703 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,153 கனஅடியாக குறைந்தது.பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 126.00 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,153 கனஅடி. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இருப்புநீர் 3,834 மில்லியன் கனஅடி. 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1,703 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவால், நேற்று 1,153 கனஅடியாக குறைந்தது.

வைகை அணையின் நீர்மட்டம் 61.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1141 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 972 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 3954 மில்லியன் கனஅடியாக உள்ளது.
 சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.50 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 கனஅடி. வினாடிக்கு 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு நீர் 93.81 மில்லியன் கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.10 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13 கனஅடியாக உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்புநீர் 272.21 மில்லியன் கனஅடி.மழையளவு: பெரியாறு 9 மி,மீ, தேக்கடி 3.8 மி,மீ, பாளையம் 1 மி,மீ, வைகை 2.4 மி,மீ வீரபாண்டி 1.6 மி.மீ என மழை பதிவாகி இருந்தது.

Tags : catchment areas ,Periyar Dam , Periyaru Dam, Water inflow, Gudalur
× RELATED முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு