×

அமீரகத்திலிருந்து சட்டவிரோதமாக மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் இறக்குமதி: கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு.!!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தூதரகம் வழியாக துபாயில் இருந்து இஸ்லாமிய மதநூல்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள வெளியுறவு துறை அமைச்சர் ஜலீலிடம் 2 முறை மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.

விசாரணையில் அவர் அளித்த விவரங்களை சுங்க இலாகாவும், என்ஐஏவும் பரிசோதித்தபோது பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று அமைச்சர் ஜலீல்-விடம் என்ஐஏ அதிகாரிகள் தாடர்ந்து, 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நேற்று கேரள வெளியுறவு துறை அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி விசாரணையில், அவர், மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் ஐக்கிய அரசு தூதரகம் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததையும், அதனை பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்அடிப்படையில், கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே  அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக அமைச்சர்  ஜலீல் பதவி விலக கோரி காங்கிரஸ், பா.ஜா உள்பட எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா முழுவதும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தற்போது, சுங்கத்துறை அதிகாரிகள் கேரள அரசு மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போராட்டம் வலுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Tags : United States ,Kerala. ,Government , Religious books, 18,000 kg of pepper imported illegally: Customs case against the Government of Kerala. !!!
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்