×

விடுதலைக்குப் பின் சசிகலா எடுக்கும் முடிவால் அரசியல் மாற்றம் இருக்கும்: அன்வர்ராஜா பரபரப்பு பேட்டி

பரமக்குடி:  விடுதலைக்குப் பின் சசிகலா  எடுக்கும் அரசியல் முடிவு, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை  உருவாக்கும்  என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 22ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிறார்.  முதல்வரை வரவேற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் எம்பி அன்வர்ராஜா செய்தியாளரிடம் கூறுகையில், ‘‘நீட், புதிய கல்வி கொள்கை விஷயத்தில் மக்கள் சொல்வதை அதிமுக அரசு கேட்கும். மும்மொழி கொள்கையை அதிமுக எதிர்க்கும். இருமொழி கொள்கைதான் அதிமுகவின் கொள்கை. தமிழ்நாட்டிற்கு தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. கண்ணும் வேண்டும், கண்ணாடியும் வேண்டும். சசிகலா விடுதலைக்குப் பின் அவர் எடுக்கும் அரசியல் முடிவு, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை  உருவாக்கும்’’ என்றார்.Tags : Sasikala ,release ,interview ,Anwar Raja , Sasikala's decision after release will be a political change: Anwar Raja's sensational interview
× RELATED விடுதலை எப்போது? பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரபரப்பு கடிதம்