ஒரேநாளில் 5,488 பேருக்கு தொற்று தமிழகத்தில் இதுவரை 8,685 பேர் உயிரிழப்பு

* மொத்த பாதிப்பு 5,30,908 ஆக உயர்வு

* சென்னையில் 1,53,616 பேர் பாதிப்பு, இறப்பு 3,037

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,488 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 67 உயிரிழந்த நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 8,685 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ெசன்னையில் 1,53,616 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3,037 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 5,30,908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. ஒரு மாதத்தில் தினசரி கொரோனா தொற்று இதே நிலையில் தான் உள்ளது. ஆனால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆகஸ்ட் மாதம் தினசரி 100க்கு மேற்பட்ட உயிரிழப்பு பதிவாகியது. இந்த மாதம் தொடக்கம் முதல் இந்த எண்ணிக்கை படிப்பயாக குறையத் தொடங்கிறது. தற்போது தினசரி 60 முதல் 80 பேர் மட்டுமே மரணம் அடைகின்றனர்.

இதன்படி தமிழகத்தில் நேற்று மட்டும் 67 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.30 லட்சமாக உயர்ந்துள்ளது. 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 85,543 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,488 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் 989 பேர், அரியலூர் 33, செங்கல்பட்டு 265, கோவை  542, கடலூர் 254, தருமபுரி 106, திண்டுக்கல் 88, ஈரோடு 118, கள்ளக்குறிச்சி 91, காஞ்சிபுரம் 151, கன்னியாகுமரி 115, கரூர் 68, கிருஷ்ணகிரி 50, மதுரை 82, நாகப்பட்டினம் 80, நாமக்கல் 106, நீலகிரி 72, பெரம்பலூர் 11, புதுக்கோட்டை 123, ராமநாதபுரம் 31, ராணிப்பேட்டை 53, சேலம் 288, சிவகங்கை 38, தென்காசி 97, தஞ்சாவூர் 162, தேனி 67, திருப்பத்தூர் 81, திருவள்ளூர் 258, திருவண்ணாமலை 148, திருவாரூர் 101, தூத்துக்குடி 90, நெல்லை 104, திருப்பூர் 187, திருச்சி 136, வேலூர் 115, விழுப்புரம் 139, விருதுநகர் 39 என 5,478 பேரும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 என சேர்த்து 5,488 பேருக்கு நேற்று தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளது.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,293 பேர் ஆண்கள், 2,194 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என தற்போது வரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 939 ஆண்கள், 2 லட்சத்து 10 ஆயிரத்து 939 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,525 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 4 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 506 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதில் தனியார் மருத்துவமனையில் 34 பேரும், அரசு மருத்துவமனையில் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 16 பேர், செங்கல்பட்டு 4, கோவை 4, கடலூர் 4, திண்டுக்கல் 1, ஈரோடு 3, காஞ்சிபுரம் 1, கன்னியாகுமரி 4, கிருஷ்ணகிரி 1, நாகப்பட்டினம் 1, நாமக்கல் 1, ராணிப்பேட்டை 2, சேலம் 3, தஞ்சாவூர் 2, தேனி 1, திருவள்ளூர் 4, திருவண்ணாமலை 2, திருவாரூர் 1, நெல்லை 1, திருப்பூர் 2, திருச்சி 3, வேலூர் 2, விழுப்புரம் 1, விருதுநகர் 2 என 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: