×

காதோடு காதாய் பேசாதீர்கள் பேப்பரில் எழுதிக் கொடுங்கள்: எம்பி.க்களுக்கு வெங்கையா அறிவுரை

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரம் தொடங்குவதற்கு முன்பாக பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு, எம்பி.க்கள் கொரோனா நோய் தொற்றை தவிர்ப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.  தொடர்ந்து அவர் கூறுகையில், “உறுப்பினர்கள் மற்றொருவரின் இருக்கைக்கு அருகே சென்று பேசாதீர்கள்.   ஒரு பக்கமாக சாய்ந்து ஒருவரோடு ஒருவர் கிசுகிசுவென்று காதோடு காதாய் பேசிக்கொள்ளாதீர்கள். நீங்கள் மற்ற உறுப்பினரிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் துண்டு சீட்டில் எழுதி கொடுங்கள். தேர்வு மையத்தில் தான் இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதிக்கப் படாது. ஆனால் அவையில் அனுமதிக்கப்படும்,” என்றார்.  அதோடு, ‘உறுப்பினர்கள் யாரும் எனது அலுவலக அறைக்கு வந்து சந்திக்க முயற்சிக்க வேண்டாம்.’ என்றும் வெங்கையா  கேட்டுக் கொண்டார்.

Tags : each other ,MPs ,Venkaiah , Do not talk to each other, write on paper: Venkaiah's advice to MPs
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...