தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10%க்கும் குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கோவிட் சஸ்பெக்ட் வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்டிபிசிஆர் ெடஸ்ட் நெகட்டிவ் என்று வரும் போது நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுத்துவதால் அவர்களுக்காக 120 படுக்கைகள் கொண்ட கோவிட் சந்தேக மையத்தை (சஸ்பெக்ட்் வார்டு) புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.  ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என்று இருக்கும். ஆனால் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும். அவர்களுக்கு கொரோனா நோயாளிகள் போல் சிகிச்சை அளிக்கப்படும். சோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வரும் ஒருநாள் வரை அவர்களும், இந்த வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். நெகட்டிவ் வந்து அறிகுறிகள் இருந்தாலும், நுரையீரல் பிரச்னை இருப்பவர்களும் இந்த வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். இது ஒரு புதிய முயற்சி.  

தமிழகம் முழுவதும் கொரோனா நோயின் பாதிப்பு 10 சதவீதத்திற்கு குறைவாக வந்துள்ளது. இது அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதை தான் காட்டுகிறது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கும் பட்சத்தில் இன்னும் கட்டுக்குள் ெகாண்டு வரமுடியும். ஊரடங்கு காலத்தை விட மக்கள் இப்போது கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பாதிப்புகள் 2 அல்லது 3 வாரங்களுக்கு பிறகுதான் தெரிய வரும். தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாசிட்டிவ் நோயாளிகளையும் விடுவதில்லை. ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆரம்பத்தில் 20 படுக்கைகளுடன் தொடங்கினோம். அதன்பிறகு 1,660 படுக்கைகள் தயாராக உள்ளது.  தமிழகம் முழுவதும் 1.42 லட்சம் படுக்கைகள் உள்ளன. மேலும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சினேசனுடன் 850 படுக்கைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் 50 சதவீதம் படுக்கைகள் ஆக்சிேனசன் உள்ள படுக்கைகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். தமிழகத்தில் 40 ஆயிரம் படுக்கைககள் ஆக்சினேஜன் பெட்டுகளாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: