பணியிடங்களில் இடமாறுதல் தற்காலிக நிறுத்தம்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள தமிழக நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று அனைத்து துறை செயலாளர் மற்றும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு பணியிடங்களில் அரசு பணியாளர்களாக உள்ளவர்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செலவினங்களை குறைக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடமாறுதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து துறை துணை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே நேரத்தில் இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இடம் மாறுதல் வழங்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>