சாரட் வண்டியில் ஊர்வலம் போனதால் எல்.முருகன் மீது வழக்கு பதிவு: போலீசார் நடவடிக்கை

சென்னை: பாஜ மாநில தலைவர் எல்.முருகன் மீது 4 பிரிவின் கீழ் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் 70 வது பிறந்தநாள் விழா சென்னையில் மாநில பாஜ தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்தது. தி.நகர் தணிகாசலம் சாலையில் பாஜ மகளிர் அணி சார்பில் 70 அடி நீள கேக் எல்.முருகன் வெட்டி கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து பா.ஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு எல்.முருகன் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.  கொரோனா தடுப்பு காரணமாக சென்னையில் மாநகர காவல்துறை சார்பில் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்டவை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையின் தடை உத்தரவை மீறி குதிரை பூட்டிய சாரட் வண்டியில் பேரணியாகவும், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடினர். இதையடுத்து மாம்பலம் போலீசார் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது ஐபிசி 148, 269, 188 உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: