கவரிங் நகைகளை அடகு வைத்து வங்கியில் 12 லட்சம் மோசடி: 2 பேருக்கு வலை

பூந்தமல்லி: வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 12 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வளசரவாக்கத்தில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நீண்ட நாட்களாக அடகு நகையை மீட்டாத வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி,  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகைகளை அடகு வைத்துவிட்டு இதுவரை அசல், வட்டி செலுத்தாமல், நகைகளை மீட்காமல் இருக்கும் நகை உரிமையாளர்களுக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பலர் நகைகளை மீட்க வரவில்லை. இதனால், அதிகாரிகள் அந்த நகைகளை ஏலம் விட முடிவு செய்தனர். அதற்காக நகைகளை மதிப்பீடு செய்தபோது, ஆலப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் வங்கியில் 440 கிராம் நகைகளை வைத்து ₹8 லட்சமும், ராஜேஸ்வரன் என்பவர் 193 கிராம் நகைகளை வைத்து ₹4 லட்சமும் பெற்றிருந்தானர்.

அந்த நகைகளை மதிப்பீடு செய்தபோது இருவரும் அடகு வைத்த நகைகள் கவரிங் என தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் அபிநயா, போலீசில் புகார் செய்தார்.  இதுகுறித்து  வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.2018ம் ஆண்டு நகைகளை அடகு வைத்தபோது இருந்த நகை மதிப்பீட்டாளர் மாறிச் சென்றுவிட்டார். மேலும், நகையை அடகு வைத்த சத்திய நாராயணன், ராஜேஸ்வரன், அப்போது பணியில் இருந்த நகை மதிப்பீட்டாளர் ஆகியோரிடம்  விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: