×

ஐடி ஊழியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை

சென்னை: விருகம்பாக்கம் தாங்கல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (38), ஐடி நிறுவன ஊழியர். ஊரடங்கால் கடந்த மார்ச் 23ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுவிட்டார். தற்போது ஐடி  நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதால், அவர் நேற்று சென்னை வந்தார். அப்போது, அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விஜயகுமார் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் போலீசார் மற்றும் வடபழனி உதவி கமிஷனர் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.Tags : shaving robbery ,IT employee ,home , IT employee home 60 shaving robbery
× RELATED வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை