×

மாநகர செய்தி துளிகள்...

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: மூலக்கடை சந்திப்பில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வியாசர்பாடியை சேர்ந்த கோபி (24), பாலா (எ) பூபாலன் (28), எருக்கஞ்சேரியை சேர்ந்த தேவா (21), செங்குன்றத்தை சேர்ந்த அருண்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

42 கிலோ கஞ்சா பறிமுதல்: சிட்லபாக்கம் அடுத்த ஜமீன் ராயப்பேட்டை ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்ற தாமோதரன் (35), கிஷோர் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

6 பேருக்கு குண்டாஸ்: சென்னையில் 5 கொலை, 3 கொலை முயற்சி உட்பட 32 வழக்குகளில் தொடர்புடைய மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சிவகுமார் (42), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பெரம்பூர் தீட்டி தோட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (26), பெரம்பூர் வஉசி நகரை சேர்ந்த வேலாயுதம் (26), மூன்று கொலை வழக்கு உட்பட 18 வழக்கில் தொடர்புடைய ரெட்டேரி கொளத்தூர் மீன் மார்க்கெட் சந்து பகுதியை சேர்ந்த இம்ரான் (எ) இம்ரானுதீன் (31), கொலை மற்றும் 9 கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய காசிமேடு ஜி.எம்.பேட்டையை சேர்ந்த மதன் (23), கொலை உட்பட 5 வழக்கில் தொடர்புடைய பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகிய 6 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

ஆசிரியையிடம் தாலி பறிப்பு: பம்மல் திருவள்ளுவர் நகர் வாசுகி அம்மையார் தெருவில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை சரஸ்வதியை (45) ஆட்டோவில் சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து, 7 சவரன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற மாங்காடு பட்டு ஆலமரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (26) மற்றும் பம்மல் பசும்பொன் நகர் ரங்கநாதன் தெருவை சேர்ந்த ரோஸ்மேரி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Police arrested Kopi (24), Bala (A) Poopalan (28), Deva (21) from Erukkancherry and Arunkumar (28) from Chenkunratty for selling cannabis in an auto at the Moolakadai junction.
× RELATED மாநகர செய்தி துளிகள்...