கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் தேர்வு.: CAHO அமைப்பு அறிவிப்பு

டெல்லி: கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. CAHO என்ற அமைப்பு இந்தியாவின் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளை தேர்வு செய்து விருதுகளை அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு CAHO அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த ஓமந்தூரார் மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முதலில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவர்களின் சிறப்பான சேவை, சரியான மருத்துவ உபகரணங்கள், செவிலியரின் கனிவான அணுமுறை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன் கூடிய உளவியல் ஆலோசனைகள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் சிறப்பான பணியை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.  

மேலும் எண்ணற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். இத்தகைய சிறப்பான அர்பணிப்புமிக்க மருத்துவமனைகளில் ஓமந்தூரார் மருத்துவமனை குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளதாக CAHO அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவமனைகளிலிருந்து 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் CAHO அமைப்புக்கு வந்தது. அதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை மற்றும் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகிய மருத்துவமனைகள் முதன்மையான விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: