×

தமிழகத்தில் தீயாக பரவும் கொரோனா.: இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கும், மொத்தமாக 5.30 லட்சம் பேரும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,30,908-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 96,424பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,14,677-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41.12 லட்சமாக அதிகரித்துள்ளது. 10,17,754 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் ஒரேநாளில் 1,174 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 83,198லிருந்து 84,372ஆக உயர்ந்துள்ளது.

* இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,75,717 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,525 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,685-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,53,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 174 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 63,03,466 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,19,939 ஆண்கள், 2,10,939 பெண்கள், 30 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona spreading fire in Tamil Nadu: Today, 5,488 people and a total of 5.30 lakh people were affected by corona in Tamil Nadu in a single day.
× RELATED தீயணைப்பு துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி