×

நாளை முதல் அடையாள அட்டை இருந்தால் தான் திருவண்ணாமலையில் தரிசனம்.: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலைடில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்கதர்களுக்கு கோயில் நிர்வாகம் வேண்டுகோள் வைத்துள்ளது. வெகு வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், கோயிலுக்கு தரிசனம் கூட்டமாக வருவதை தவிர்க்கும் பொருட்டு கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, அண்ணாமலையார் தரிசனம் செய்து அம்மன் தரிசனம் செய்து பின்னர் மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (19-09-2020) நாளை முதல் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வங்கி பாஸ் புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக எடுத்துவந்தால் மட்டுமே பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்படி அடையாள அட்டை கொண்டுவராத பக்தர்களை திருக்கோயில் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Thiruvannamalai ,Darshan ,administration ,announcement ,Temple , Darshan in Thiruvannamalai only if you have an identity card from tomorrow .: Temple administration announcement
× RELATED திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை!