×

விவசாயம் தொடர்பான மசோதாக்கள் எதிர்த்து ஹர்சிம்ரத் கவுர் படல் ராஜினாமா : அரியானா பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து?

சண்டிகர் : அரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தநிலையில், 2019ல் நடந்த பேரவை தேர்தலில் பாஜக ெபரும்பான்மையை இழந்தது. அதனால், இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனான, ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) தலைவர் துஷ்யந்த் சவுதலா தலைமையிலான கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து அகாலிதளம் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், இம்மாநிலத்தில் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால், துணை முதல்வராக உள்ள துஷ்யந்த் சவுதாலா, தனது பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘துணை முதல்வர் துஷ்யந்த், மத்திய அமைச்சராக பணியாற்றிய ஹர்சிம்ரத் கவுர் பாதலை போன்று நீங்களும் குறைந்தபட்சம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும். விவசாயிகளை விட உங்கள் நாற்காலி மீது உங்களுக்கு அதிக ஆசை உள்ளது’ என்று ெதரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவை, துஷ்யந்த் சவுதாலா இதுவரை எதிர்க்கவில்லை. ஜே.ஜே.பி கட்சிக்குள்ளும், அதன் கூட்டணியிலும் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட இம்மசோதா நிறைவேற்றம் மாநில கூட்டணி ஆட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Harsimrat Kaur Badal ,coalition government ,Haryana BJP ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன்...