×

”பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்” : மத்திய அரசுக்கு எதிராக சீறிய பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா!!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இது, அக்டோபர் 1ம் தேதி வரை வார விடுப்பின்றி, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.இதன் முதல் நாளான்று விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இந்த 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மக்களவையில் விவசாயிகள் பண்ணை வர்த்தகம் தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பேசியது வைரலாக பரவியது.அவர் பேசியதாவது, தற்போதுள்ள மாநில சட்டங்களின் கீழ், இந்த சந்தைக் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே, இது மாநில கருவூலத்துக்கும் கணிசமான இழப்பை ஏற்படுத்தப் போகிறது, ஏனெனில் இப்போது அறிவிக்கப்பட்ட பகுதிக்கு, வெளியே உள்ள எந்த பகுதியும் எந்தவொரு மாநில வருவாயையும் உணரமுடியாத ஒரு வர்த்தகப் பகுதியாக கருதப்படும்.

ஒரு விவசாயி அல்லது வர்த்தகர் ஒரு வர்த்தகப் பகுதியில் வர்த்தகம் செய்யும் வேளையில், சாலையின் குறுக்கே மற்றொருவரிடம் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படப்போவது கிராமப்புற அளவில் அபத்தமான விளைவுகளை உருவாக்கப் போகிறது.முக்கியமான விஷயமாக பெரும்பாலான மாநில சட்டங்களின்படி, ஒரு வர்த்தகர் பட்டியலிடப்பட்ட விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் அவர் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்லது மாநில சந்தைப்படுத்துதல் வாரியத்தால் வழங்கப்பட்ட உரிமத்தை கொண்டிருக்க வேண்டும். அந்த கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லாமல் போனால், உரிமம் பெறாத வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

மொத்தத்தில் இந்த மசோதா விவசாயிகளின் நோக்கத்துக்கோ பண்ணை வர்த்தகர்களின் நோக்கத்துக்கோ எவ்வித நலன்களையும் தரப்போவதில்லை. இது கூட்டாட்சி முறையை ஒழிப்பதற்கான அப்பட்டமான முயற்சி மட்டுமே. நிறைவாக ஒன்றை கூறிக்கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் அரசியலமைப்பு வழங்கிய பாதுகாப்பை அகற்ற ஒரு பூதத்தை உருவாக்குகிறீர்கள். அந்த பூதம் உங்களையே ஒரு நாள் காவு வாங்கும். அந்த நாளை நினைவில் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள். இவ்வாறாக மஹுவா மொய்த்ரா பேசினார்.

Tags : Mahua Moitra ,Central Government , Federal Government, Female MP, Mahua Moitra
× RELATED எம்பி பதவி பறிப்புக்கு எனது...