×

அனைத்து கட்சியினரும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என பார்க்கவேண்டும் :அமைச்சர் உதயகுமார் பேட்டி

பெரம்பூர், : சென்னை அயனாவரத்தில் உள்ள திருவிக நகர் மண்டல அலுவலகத்தில்  இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய களப்பணியாளர்களுக்கு  சால்வை அணிவித்து கவுரவித்தார். அதன்பிறகு மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், திருவிக நகர் மண்டல பொறுப்பு அதிகாரி  செந்தில்நாதன், செயற்பொறியாளர் நாச்சான், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்து அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு  கொரோனா  தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 174 பரிசோதனை மையங்களில் தினமும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 5 ஆயிரத்து 560 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்று பாதித்தவர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக  படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தளர்வுகளை மக்கள் எச்சரிக்கையோடு கையாளவேண்டும்.  விவசாயத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை பாதுகாப்பது அரசின் கடமை. மணல் கடத்தலை இரும்பு கரம்கொண்டு அரசு அடக்கும். ஒருசில இடங்களில் நடக்கும் தவறுகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சியினரும் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என நினைப்பார்கள். மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என பார்க்கவேண்டும். கிஷான் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : parties ,Udayakumar ,interview ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...