×

காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டுயானை உயிரிழப்பு.: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உடல் கண்டெடுப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த மேலும் ஒரு காட்டுயானை உயிரிழந்துள்ளது. காட்டுயானையின் கால் மற்றும் உடலில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை சாடிவயலில் இருந்து சுயன்பு மற்றும் வெங்கடேஷ் என்ற இரண்டு கும்கி யானைகளை வனத்துறை அதிகாரிகள் வரவழைத்து இருந்தனர்.

அனால் காயம் பட்ட காட்டுயானை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று காரணத்தினால் உடனடியாக சிகிச்சையை வனத்துறையினர் தொடர முடியவில்லை. கும்கி யானைகள் உதவியுடன் காயம் அடைந்த காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கடந்த மூன்று நாட்களாக தேடி வந்துள்ளனர். ஆனால் காயப்பட்ட காட்டுயானையை தேடிவந்த வனத்துறையினருக்கு கடைசியில் அந்த யானையின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது.

நெல்லித்துறை வனப்பகுதியில் காட்டுயானையின் உடல் கிடைத்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கும்கி யானைகளை கோவை சாடிவயல் பகுதிக்கு திருப்பி அனுப்ப வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 


Tags : forest ,Mettupalayam , Wild elephant wandering around with injuries: Body found in Mettupalayam forest
× RELATED மைசூர் தசரா விழாவில் எளிமையாக நடந்த யானை ஊர்வலம்