×

“சிறப்பு குழந்தைகள்” ,“மாற்றுத் திறன்” மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் : திமுக எம்.பி.கனிமொழி

சென்னை : சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை திறன், காது கேட்கும் திறன் பாதிப்பு உள்ளிட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நீண்ட காலமாக கல்வி கற்காமல் மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருப்பதால் கல்வியில் பின்தங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட வில்லை.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி.கனிமொழி, 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்த தமிழக அரசு, “சிறப்பு குழந்தைகள்” மற்றும் “மாற்றுத் திறன்” மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்.தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, “சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்” தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.


Tags : children ,Kanimozhi ,Corona ,DMK , Special children, alternative skills, students, corona, inhumane, action, DMK, MP Kanimozhi
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...