கோவை நிதி நிறுவன அதிபரை கைது செய்தது கேரள போலீஸ் : ரூ.3500 கோடி மோசடி புகாரில் அதிரடி நடவடிக்கை!!!

திருவனந்தபுரம்:  கேரளாவில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கோவை நிதி நிறுவன அதிபரை கேரள போலீசார் கைது செய்தனர். கோவையில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து மோசடி பணத்தில் வாங்கி குவித்த பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையை தலைமை இடமாக கொண்டு விளங்கிய யுனிவர்சல் ட்ரேடிங் சோலியூசன் என்ற தனியார் நிதி நிறுவனத்தினர், பொதுமக்களிடம் ரூ.3,500 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தன என்பது புகராகும். பாப்பம்பட்டியை சேர்ந்த நண்பர்களான கவுதம் ரமேஷ், பிரவீன் குமார் ஆகியோர் கூட்டாக இணைந்து 2015ம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கின. முதலீட்டு பணத்தை ஒரே ஆண்டில் 3 மடங்காக திரும்ப தருவதாக கூறி, பொதுமக்களிடம் ஆசை காட்டினர்.

அதனை நம்பி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் போட்டிபோட்டு முதலீடு செய்தனர். இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 2,200 கோடியை வாரி குவித்த அவர்கள், பின்னர் கம்பி நீட்டிவிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பவர்கள் அளித்த புகாரின்பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, சமீபத்தில் சேலத்தில் பதுங்கி இருந்த கவுதம் ரமேஷ் மற்றும் பிரவீன் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது கேரளாவிலும் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. அதன்பேரில் கேரள போலீசார் சேலம் சென்று கவுதம் ரமேஷை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, அவரை கோவை அழைத்து வந்து, பீளமேட்டில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், கவுதம் ரமேஷை கைது செய்து போலீசார் கேரளா கொண்டு சென்றார். இதனையடுத்து மோசடி பணத்தில் வாங்கி குவித்த சொத்துகள் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், சொத்துகளை பறிமுதல் செய்யவும் கேரள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: