அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு வங்கக்கடலில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மன்னார் வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தென்மேற்கு, தென்கிழக்கு, மத்தியகிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 20 வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 20 வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories: