தமிழகத்தில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்கும் சூழலை உருவாக்கி உள்ளோம்... வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன : முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை : சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, இன்று தமிழ்நாட்டில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.இன்று நடைபெறும் இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற உள்ள 3,190 இளநிலை மற்றும் முதுகலை மாணாக்கர்களுக்கும், முனைவர் பட்டம் பெற உள்ள 129  ஆராய்ச்சி அறிஞர்களுக்கும், தங்கப் பதக்கம் பெற உள்ள 20 மாணவர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கு தடையின்றி கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  எனவே, மாண்புமிகு அம்மா அவர்களைத் தொடர்ந்து, மாண்புமிகு அம்மாவின் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.  இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

உயர்கல்வித் துறையில் மாண்புமிகு அம்மா அவர்களாலும், மாண்புமிகு அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.  

எ    அனைவருக்கும்  உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.  

எ    2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2019-20 ஆம் ஆண்டு வரையில், 30 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும்    தொடங்கப்பட்டுள்ளன.  

எ    2019-20 ஆம் ஆண்டில் 14 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

எ    2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரையில், 21 அரசு பலவகை தொழில்நுட்பக்  கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

எ    கடந்த 2012-13 ஆம் ஆண்டிலிருந்து 4 புதிய அரசு பொறியியல்  கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

எ    இந்த கல்வி நிலையங்கள்  நகர மற்றும் கிராம மக்கள் எளிதில் சென்றடையும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

எ    சென்ற 2011-12 ஆம் ஆண்டு முதல்  இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.  

எ    இதனால் உயர்கல்வி கற்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எ    சமீபத்தில் தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சார்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன என்பதை பெருமிதத்துடன் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எ    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்  உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக 80 கோடி  ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

எ    முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு  கட்டணச் சலுகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, பின்தங்கிய மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை, இலவச பேருந்து அட்டை  மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிக்கும் மாணவர் வரை இலவச கல்வி போன்ற முன்னோடி திட்டங்களால் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எ    2020-21 ஆம் ஆண்டு உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக

5 ஆயிரத்து 52 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

எ    மாணாக்கர்களின் கல்வி மேம்பட மாண்புமிகு அம்மாவின் அரசு இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எ    மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக  இன்று உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   

எ    சமீபத்தில் கூட புதிய ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் தனியார் பல்கலைக்கழகங்களின் கட்டடங்களுக்கு நான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தேன்.   மேலும், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவிட மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவிட்டுள்ளது.

    

இப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களையும் ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும், வளர்ச்சிக்குத் துணையாக நின்ற பெருந்தகையாளர்களையும் நான் வாழ்த்துகிறேன். சமூகத்தில் குழந்தைகளின் கனவுகளை தாங்கிக் கொண்டு உறுதுணையாக நிற்கின்ற பெற்றோர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை பகிர்ந்து கொள்கிறேன், என்றார்.

Related Stories: