×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Chennai Meteorological Center , Chance of rain in 15 districts in next 48 hours due to atmospheric circulation: Chennai Meteorological Center
× RELATED 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு