×

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ-க்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் ? : உயர்நீதிமன்ற கிளை கேள்வி!!

மதுரை: சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதான 10 பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் காவலர் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குள வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என சிபிஐக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக செப்.28 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே சாத்தான்குள தந்தை, மகன் கொலை வழக்கில் 2வது முறையாக ஜாமின் கோரி 3 காவலர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.


Tags : CBI ,investigation ,High Court , Sathankulam, father, son, murder, case, CBI, High Court branch, question
× RELATED உ.பி. ஹத்ராஸ் வன்கொடுமை தொடர்பாக...