போதைப் பொருள் உற்பத்தியில் இந்தியா முன்னணி! : ஆப்கன், மியான்மர், கொலம்பியா உள்ளிட்ட 20 நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு!!!

டெல்லி:  உலக நாடுகளில் போதைப்பொருள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தியா மீதான டிரம்ப் குற்றச்சாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், கொலம்பியா, கோஸ்டா ரிகா, டெமினிகன் ரிபப்ளிக், வெனிசூலா, பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப்பொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் உற்பத்திக்கு எதிராக கடந்த 12 மாதங்களில் சர்வதேச ஒப்பந்தத்தை மீறி வெனிசூலா, பொலிவியா ஈடுபட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கொலம்பியா அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது கோகா, கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களின் உற்பத்தி பெரு நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் அதனை தடுக்குப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அந்நாடு செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் உற்பத்திக்கு எதிராக மெக்சிகோ அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: