×

பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் மேலும் ஒரு வாலிபர் சிக்கினார்

காஞ்சிபுரம்: பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2812 பேருக்கு 78 லட்சம் முறைகேடாக அனுப்பப்பட்டது தெரிந்தது.  இதில் ₹59 லட்சம், போலி விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்டது. மீதமுள்ள 19 லட்சம், அந்தந்த வங்கிகளில் இருந்து, அரசுக்கு பணப் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறி
முதல் செய்யப்பட்ட மொத்த தொகையும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்ட வங்கிக் கணக்கில் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என காஞ்சிபும் கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை கிளியனூரை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், உளுந்தூர்பேட்டையில் பிரவுசிங் சென்டர் நடத்தி, அதன் மூலம் 600க்கும் மேற்பட்டோருக்கு போலியான ஆவணங்களை தயாரித்து, அவர்கள் பெயரில் கிசான் திட்டத்தில் 60 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டனை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரிதேவி, மணிகண்டனை  15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவா், செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்  இந்த மோசடியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒன்றிய அளவில் வேளாண் துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா என சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


Tags : project scandal , Another youth was caught in the Prime Minister's Kisan project scandal
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு...