×

பண்ணை சேவைகள் மசோதா 2020-க்கு எதிர்ப்பு...!! மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா; பாஜக கூட்டணி கட்சியான அகாலிதளம் அறிவிப்பு

டெல்லி: மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசின் விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. 3 சட்ட மசோதாக்களை எதிர்த்து பதவி விலகினார் கவுர். பதவி விலகிய மத்திய அமைச்சர் கவுர் பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்தை சேந்தவர். 3 சட்ட மசோதாக்களையும் எதிர்த்து அகாலிதளம் தலைவர் சுக்பீர் மக்களவையில் பேசியிருந்தார்.

மக்களவையில் அவரது கணவரும், எஸ்ஏடி தலைவருமான சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது; “அகாலிதளம் கட்சி தொடர்ந்து அரசாங்கத்திற்கும் பாஜகவுக்கும் ஆதரவளிப்பார்கள், ஆனால்“ உழவர் எதிர்ப்பு அரசியலை எதிர்ப்பார்கள்.  தகவல்களின்படி, ராஜினாமா பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த மசோதாவுக்கு எதிரானவர்கள். 20 லட்சம் விவசாயிகள் இந்த மசோதாவால் பாதிக்கப்படுவார்கள்.
3 லட்சத்துக்கும் மேற்பட்ட மண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Tags : Farm Services ,Harsimrat Kaur ,Akali Dal ,announcement ,BJP , Opposition to Farm Services Bill 2020 ... !! Union Minister Harsimrat Kaur resigns; BJP alliance party Akali Dal announcement
× RELATED நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு...