தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் :அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்க தூதரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் 1000 மடங்கு பதில் தாக்குதல் தரப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் ஈரான் மீதான புதிய பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகள் சபையில் அமல்படுத்த இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையே 2018ல் போர் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம் ஈராக்கில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பகைமை தொடரும் நிலையில், ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  

Related Stories: