×

முதல் உயில்

நன்றி குங்குமம் முத்தாரம்

முதன்முதலில் உயில் எழுதும் வழக்கம்  கி.பி. 1102ம்  ஆண்டு சிசிலி நாட்டில் ஆரம்பமானது. அப்போது அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னர் ரோஜர், தன் சொத்துக்களை உயிலாக எழுதிப் பதிவு செய்தார். இதற்குப்பின் தான் உயில் எழுதி வைக்கும் முறை பிற நாடுகளுக்குப் பரவியது. உலகிலேயே முதன்முதலில் மடிக்கக்கூடிய  கைவிசிறி சீனாவில் ஜியாங்சு என்ற கிராமத்தில் தயாரிக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் ‘டாக்டரினோ கிறிஸ்டாலோ’ என்பதாகும்.

1557ம் ஆண்டு கோவாவில் அச்சிடப்பட்ட இப்புத்தகம் புனித சேவியரைப் பற்றிய வினா- விடைத் தகவல் களைக் கொண்டது.உலகிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக உள்ள நாடு ஜப்பான். ஜப்பானியர்கள் மீன் உணவை அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம். கோழிமுட்டையின் வெள்ளைக் கருவிற்கு ஆங்கிலத்தில் ‘க்ளேர்’ (Glair) என்று பெயர். இது ‘க்ளாரஸ்’ (Glaurus) என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும். லத்தீன் மொழியில் ‘க்ளாரஸ்’ என்றால் மிகவும் தெளிவானது என்று பொருள்.

Tags : First will
× RELATED இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...