உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.17 கோடியாக உயர்வு: 9.45 லட்சம் பேர் பாதிப்பு; 61,223 பேர் கவலைக்கிடம்.!!!!

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 3 கோடியே 00 லட்சத்து 30 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 87 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 223 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரத்து 918 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 45 ஆயிரத்து 051 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 6,828,301    

இந்தியா - 5,115,893

பிரேசில் - 4,421,686

ரஷியா -  1,079,519    

பெரு -   744,400

கொலம்பியா - 736,377

மெக்சிகோ - 680,931

தென் ஆப்பிரிக்கா - 653,444

ஸ்பெயின் - 614,360

அர்ஜெண்டினா - 589,012

Related Stories: