×

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு: பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் வாழ்த்து.!!!

டோக்கியோ: ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே. இவரது கடந்த பதவிககாலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் முடிகிறது.  இவர், கடந்த 2006ம் ஆண்டு ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராக பொறுப்பேற்றார். உடல் நிலை காரணமாக தனது பிரதமர் பதவியை 2007ம் ஆண்டு ராஜினாமா செய்தார். கடந்த 2012ல் 2வது முறையாக  பிரதமராக பதவி ஏற்றார். விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவரான இவர், ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக  அபேவின் உடல்நிலை சரியில்லை என்பது குறித்து செய்திகள் வெளியாகி வந்தன. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தார். இது தொடர்பாக அபே கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கூறுகையில், ‘‘இளம் வயதில் இருந்தே பெருங்குடல் அழற்சி நோய் இருந்தது. ஜூனில் இருந்து இந்த நோயால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதாக  மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதற்கு மருந்து எடுத்துக் கொள்கிறேன். இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நான் இன்னும் குணமாகவில்லை என அறிந்து கொண்டேன். எனது உடல் நல பாதிப்பு,  அலுவல்களை பாதித்து விடக் கூடாது என்பதால் எனது பணியை ராஜினாமா செய்து இருக்கிறேன்,” என்றார்.

ஜப்பானின் சட்டத்தின்படி, அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக ஒருவர் பதவி ஏற்பார். அபேவின் ராஜினாமாவுக்கு பிறகு பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பது குறித்த யூகங்கள், ஜப்பானில்  அதிகமாக இருந்த நிலையில், அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா நாட்டின் பிரதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பதவி வகிக்கவுள்ளார். இதற்கிடையே,  ஜப்பான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவிற்கு பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.Tags : Yoshihide Suka ,Japan , Yoshihide Suka elected Japan's new Prime Minister: Congratulations to various Prime Ministers and Prime Ministers !!!
× RELATED ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு