×

82,066 பேர் பலி.. 39. 42 லட்சம் பேர் குணம்.. நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சத்தை தாண்டியது.. கடந்த11 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 82 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 90,123 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,20,359 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,290 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  82,066  ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 82,961 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 39,42,360 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,95,933 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 78.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.63% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.84% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,16,842 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 5,94,29,115 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
    
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 292174 ; குணமடைந்தோர் : 775273; இறப்பு : 30409

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46806 ; குணமடைந்தோர் : 458900 ; இறப்பு : 8502
    
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 29787 ; குணமடைந்தோர் : 191203 ; இறப்பு : 4806

கேரளா : சிகிச்சை பெறுவோர் : 31226 ; குணமடைந்தோர் : 82341 ; இறப்பு : 466

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 98555 ; குணமடைந்தோர் :369229 ; இறப்பு : 7481
    
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 92353 ; குணமடைந்தோர் : 486531 ; இறப்பு : 5041

Tags : corona victims ,country , Mohan Kumaramangalam, Government Medical College, Hospital, Nurses, Struggle...
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...