6வது மாதமாக ஆகஸ்டில் ஏற்றுமதி 12.66% சரிந்தது

புதுடெல்லி: கடந்த மாதத்துக்கான ஏற்றுமதி இறக்குமதி விவரங்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:  கடந்த மாதத்தில் ஏற்றுமதி 2,270 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12.66% குறைவு. இதற்கு பெட்ரோலியம், தோல், இன்ஜினியரிங் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சரிந்ததே காரணம். இதுபோல் இறக்குமதியும் 26% சரிந்து 2,947 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 677 கோடி டாலராக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,386 கோடி டாலராக இருந்தது. இறக்குமதியை பொறுத்தவரை அதிகபட்சமாக எண்ணெய் இறக்குமதி 41.62% சரிந்து 642 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதி 370 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு இது 136 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்றுமதி 26.65%  சரிந்து 9,766 கோடி டாலராகவும், இறக்குமதி 43.73% சரிந்து 11,838  கோடி டாலராகவும் உள்ளது.

Related Stories: