பத்மாவும் கங்காவும்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஹசினா, பத்மா நதியில் பிடித்த மீன்களை மம்தாவுக்கு ஒரு பெட்டி நிறைய கொண்டுவந்து கொடுத்தார். இதற்குமுன் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, மேற்கு வங்காளத்திற்கு பத்மா நதி மீன்களை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார் மம்தா.

அதற்கு ஹசினா ஜோக்காக, ‘‘நீங்க தீஸ்தா நதி நீரை கொடுத்து... எங்க பத்மா மீனை எடுத்துக்குங்க’’என்றார். தீஸ்தா நதி சார்பாக மேற்கு வங்காளம்  - பங்களாதேஷ் இடையே பிரச்னை உண்டு. சரி... அது என்ன... பத்மா நதி? கங்கை நதி பங்களாதேஷில் நுழைந்தபின், அதன் கிளை நதி பத்மா என  அழைக்கப்படுகிறது.

- வைஷ்ணவி

Related Stories: