×

74வது சுதந்திர தின விழா அரசு அலுவலகங்களில் கொண்டாட்டம்

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினவிழா சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  
* சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தேசிய கொடியேற்றி வைத்து, சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில், நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தேசிய கொடியேற்றினார். இதில் இணை ஆணையர்கள் மதுசுதன் ரெட்டி, சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் குமரவேல் பாண்டியன், மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வர்கீஸ், பி.என்.தர், ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆணையர் பிரகாஷ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
* சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு மாவட்ட ஆட்சியர் காளிதாஸ் தேசிய கொடியேற்றி வைத்து, கொரோனா தொற்றால் பலியான 4 காவல்துறை அலுவலர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
* மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தேசிய கொடியேற்றினார். இதில் செயலாளர் பாலசுப்பிமணியம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன் கொடியேற்றினார்.
* மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையர் வளாகத்தில் ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் கொடியேற்றினார்.
* மாநில தகவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில தலைமை தகவல்  ஆணையர் ஆர்.ராஜகோபால் தேசிய கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாநில தகவல் ஆணையர்கள் செல்வராஜ், தமிழ்குமார், பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
* பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் தேசிய கொடியேற்றி, மாநகர போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 116 ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
* சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் ஹரிஹரன் கொடியேற்றினார். இதில் செயல் இயக்குனர் பிரபு சங்கர் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
* சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் தலைவர் ரவீந்திரன் கொடியேற்றி, சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். துணை தலைவர் சிரில் சி ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* காமராஜர் துறைமுகத்தில் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கொடியேற்றினார்.
* சென்னை விமான நிலையத்தில் பொறுப்பு இயக்குனர் சி.வி.தீபக் கொடியேற்றினார்.
* தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பெரம்பூரில் உள்ள ரயில்வே ஸ்டேடியத்தில் கொடியேற்றினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிலைய இயக்குனர் சிவாஜி ஹங்குரு கொடியேற்றினார்.
* சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இல்ல அலுவலகத்தில் தலைமை ஆணையர் கிருஷ்ணா ராவ் கொடியேற்றினார்.
* சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தலைமை பொது மேலாளர் சஞ்சீவி தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
* சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் கொடியேற்றி, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
* தேனாம்பேட்டை முதன்மை பொது கணக்கு அலுவலகத்தில், முதன்மை பொது கணக்கு அதிகாரி ஜெய்சங்கர் கொடியேற்றினார்.
* நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஆணையர் விக்ரம் கபூர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர்கள் ஹரிப்ரியா, சிவக்குமார், வான்மதி (திருப்பணி), கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர்கள் ஜெயபிரியா, கவேனிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
* சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் தேசிய கொடியேற்றினார். இதில், செயற்பொறியாளர் பரிதி, உதவி செயற்பொறியாளர் ஜெய்க்கர், இளநிலை பொறியாளர் சம்பத் உள்ளிட்ட பல்ர கலந்து கொண்டனர்.
* அரும்பாக்கம் அரசு அண்ணா சித்த மருத்துவமனை வளாகத்தில் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். பூமா கொடியேற்றினார். டாக்டர் வெண்தாமரை செல்வி, ஊழியர்கள் ஆறுமுகம், காளிமுத்து, குணசேகரன், சரவணன், வரதராஜன் மற்றும் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
* கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கொடியேற்றி, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
* ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் தேரனிராஜன் தேசிய கொடியேற்றினார்.
இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தப்பட்டது.

Tags : Independence Day Celebration ,Government Offices , 74th Independence Day Celebration, Government Offices
× RELATED மாநகராட்சி 5வது மண்டலத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்