×

மதுபாட்டில்களை விற்பனை செய்வதில் தகராறு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு

சென்னை: வெளி மாவட்டங்களில் மதுபாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்த தொழில் போட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி  பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  சென்னை வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்நதவர் கேசவன் (40). விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஆா்கே நகர் பகுதி துணை  செயலாளர். இவரது மனைவி பிரியா (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால், சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி பலர், வெளி மாவட்டங்களில்  இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் கேசவன், மதுபாடில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதே பகுதியை சேர்ந்த சிலரும், மதுபாட்டில்களை கூடுதல்  விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், அவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டு, அடிக்கடி மோதல் நடந்து, முன் விரோதம் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று மாலை கேசவன், தனது வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர், அவரிடம் தகராறு  செய்தனர். பின்னர் அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர். சுதாரித்து கொண்ட கேசவன், அங்கிருந்து தப்பியோடினார்.

 ஆனால், மர்மநபர்கள் அவரை விரட்டி சென்று தலை, கழுத்து, கை, முதுகு, கால் உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். அதில், கேசவன்  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு , அப்பகுதி மக்கள் வந்தனர். இதை பார்த்ததும், மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.
 தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கேசவனை மீட்டு, ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

 புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில் விற்பனை செய்த தொழில் போட்டியில் கேசவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு  காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி  தேடி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும்  நிலவுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Tags : Liberation Tigers of Tamil Eelam , Liquor bottles, sale, Liberation Leopards Party, celebrity, hacking, Thandayarpet
× RELATED அனுமதி பெறாமல் கொடி ஏற்ற முயற்சி...