×

ஜம்முவில் உள்ள பிரபலமான வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று துவக்கம்: 5 மாதங்களுக்கு பிறகு அனுமதி

ஜம்மு: ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை ஐந்து மாதங்களுக்கு பின்னர் இன்று தொடங்குகிறது. ஜம்முவில்  உள்ள பிரபல  வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்  காரணமாக கடந்த மார்ச் 18ம் தேதி  ரத்து செய்யப்பட்டது. 5  மாதங்கள்  கடந்த நிலையில், இன்று  முதல் இக்கோயிலில்  யாத்திரை  தொடங்குகிறது. இதனை  முன்னிட்டு கொரோனா நோய் தொற்று பரவல்  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கோயில் வளாகம் நாள்தோறும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு  வருகின்றது.

இது தொடர்பாக கோயில் தலைமை  நிர்வாகி ரமேஷ் குமார் கூறுகையில், “கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். 10  வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நோயுள்ளவர்கள்,  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களை  சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ்  வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்,” என்றார்.

Tags : Pilgrimage ,starts ,Jammu ,Vaishnavi Devi Temple , Jammu, Vaishnavi Devi Temple, Pilgrimage
× RELATED ராமநவமி யாத்திரைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!!