×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களின் பெயர்களை பொது அறிவிப்பாக வெளியிடக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர்களின் விவரங்களை பொது அறிவிப்பாக வெளியிடக்கோரிய  மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள  மன்னார்கோயிலில் உள்ள ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயிலில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த  மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு முரணாக, அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள்  நியமிக்கப்படுவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோயில்களின் அறங்காவலரின் பெயர், தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோயில் நில ஆக்கிரமிப்பில்  ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா போன்ற விவரங்களை அந்தெந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது  அறிவிப்பாக வெளியிட்டு, கோயில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில்  கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும்  மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags : temples ,trustees ,High Court ,Government of Tamil Nadu ,Treasury Department ,Treasury Department: High Court , Charitable Trusts, Temples, Trustees, Government of Tamil Nadu, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...