×

கோதாவரி ஆற்றில் 10 லட்சம் கனஅடி நீர் திறப்பு - கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் தவளேஸ்வரம் அணையில் இருந்து நொடிக்கு 10 லட்சம் கன அடி நீர் கோதாவரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திரத்தின் போலாவரம், தேவிப்பட்டணம் பகுதிகளில் பல ஊர்களில் வெள்ளம் புகுந்துள்ளது.

கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் தவளேஸ்வரத்தில் உள்ள சர் ஆர்தர் காட்டன் அணையில் இருந்து நொடிக்குப் பத்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டபோதே ஆற்றில் படகுகளை இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.Tags : Godavari ,areas , Godavari River, flood alert
× RELATED ஆண்டிபட்டி அருகே தரமற்ற பணியால் தண்ணீர் கசியும் புதிய குடிநீர் தொட்டி