×

தூய்மை என்பதை மதமாய் செய்வோம்..! தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,32,105-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் 24,61,190 பேர் இதுவரை கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17,51,555 பேர் குணமாகி உள்ளனர். இதன் சதவீதம் 71.17 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64,553 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஒரே நாளில் 1,007 பேர் இறந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 413 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48,040 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், உயிரிழப்பு விகிதம் 1.95 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,860 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,72,251 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,236 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 5,641- ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,179 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,15,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 135 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 36,40,796 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 81.97% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 71,343 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,860 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,00,253 ஆண்கள், 1,31,823 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
     
     ^ டெல்லி - 01

     ^ கேரளா - 03

     ^ கர்நாடகா - 14

     ^ பீகார் - 01

     ^ ஆந்திரப்பிரதேசம் - 02

     ^ புதுச்சேரி - 02

 * வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ கத்தார் - 02

     ^ சவூதி அரேபியா - 03

     ^ அரபு எமிரேட்ஸ் - 01

Tags : Corona ,Tamil Nadu , Purity, Tamil Nadu, corona, loss of life
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...